ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஐபிஎம் நிறுவனத்தின் “இன்ஸ்டிடியூசனல் எக்ஸ்சலன்ஸ்” விருது

Spread the love

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு “இன்ஸ்டிடியூசனல் எக்ஸ்சலன்ஸ்” விருது வழங்கப்பட்டது.
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஆரோ பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற ஹேக்கத்தான் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. கல்வி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு ஹேக்கத்தான் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்” போட்டியில், பொறியியல் கல்லூரி அணிகளுடன் போட்டியிட்டு முதல் பரிசை வென்று சாதனை படைத்தனர். அந்தப் போட்டியில் பங்கேற்ற அணிகளில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த ஒரே அணி இதுவாகும்.
அதேபோல், இஸ்ரேல் நாட்டின் ஏரியல் பல்கலைக்கழகம் நடத்திய பன்னாட்டு ஹேக்கத்தான் போட்டியிலும் இந்தியாவை பிரதிநிதித்துவப ்படுத்தி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தொழில்நுட்ப துறையில் பொறியியல் மாணவர்களுக்கு இணையாக திறமையுடன் விளங்கி வரும் இக்கல்லூரி மாணவர்கள் கல்வியாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் மற்றும் இணைய பாதுகாப்பு போன்ற துறைகளில் புதுமையான தீர்வுகளை உருவாக்கி வருகின்றனர். மாணவர்களின் புதுமைத்திறன், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறனை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.
ஐபிஎம் நிறுவன தொழில்நுட்ப நிபுணர் ஆய்வகத்தின் நாட்டின் மேலாளர் ஜெகதிஷா பட் “இன்ஸ்டிடியூசனல் எக்ஸ்சலன்ஸ்” விருதை வழங்கினார். கல்லூரி சார்பில் முதல்வரும் செயலருமான முனைவர் பி.எல். சிவக்குமார் விருதைப் பெற்றுக ்கொண்டார்.
இந்த விருதைப் பெற்றுத் தந்த கல்லூரி மாணவர்களையும், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த முதல்வர் மற்றும் பேரா சிரியர்களையும் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் பாராட்டி வாழ்த்தினார்.