வைரமுத்துவுக்கு எதிராக நடவடிக்கை கோரி கோவையில் மனு – ராமனை இழிவாக பேசியதாக புகார்!

Spread the love

பிரபல கவிஞர் வைரமுத்து ராமர் குறித்து இழிவாக பேசியதாக கூறி, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையுடன் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

கோவை ஸ்ரீ நாராயண ராமானுஜ சுவாமிகள் தலைமையில் இந்த மனு வழங்கப்பட்டது. அதில், “ராம் அவதாரம் உயர்விலும் உயர்வானது. தெய்வ ராமரை குறித்து வைரமுத்து பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது கோடி கணக்கான பக்தர்களின் மனதை புண்படுத்தும் செயல்,” என தெரிவித்தார்.

மேலும், “வைரமுத்து பக்தர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்டத் தலைவர் ஆ.வெ. மாணிக்கவாசகம், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில்குமார், சமுதாயப் பேரவையைச் சேர்ந்த பெரியசாமி, பாஜக நிர்வாகிகள் நடராஜ், கரிகாலன், கோவை சிவா, கிருஷ்ணா ரெட்டி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.