வியாபாரிகள் நல சங்கம் நடத்தும் மாபெரும் கல்வித் திருவிழா! 100 அரசு பள்ளி மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பிப்பு!

Spread the love

கோவை ஒத்தக்கால்மண்டபத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வியாபாரிகள் நல சங்கம் சார்பில், 100 அரசு பள்ளி மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் மாபெரும் கல்வித் திருவிழா ஒத்தக்கால்மண்டபம் G.S மஹாலில் ஜூலை 12 அன்று நடைபெற்றது.

வியாபாரிகள் நல சங்க தலைவர் கருணா ஹரிராம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கல்வித் திருவிழாவிற்கு வியாபாரிகள் நல சங்க செயலாளர் வினோத், மற்றும் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், ஸ்ரீராம் பாலிமெர்ஸ் நிறுவன எம் டி சாந்தாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மணி மற்றும் சுரேஷ் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர். செம்மொழிச் செல்வன் ராகுல்ராம் வாழ்த்துரை வழங்கினார்.

வியாபாரிகள் நல சங்க தலைவர் கருணா ஹரிராம், செயலாளர் வினோத் ஆகியோர் மாணவர்களுக்கு காமராசர் கல்வி விருது வழங்கி சிறப்புரை நிகழ்த்தினர்.

மேலும் சங்க நிர்வாகிகள், ஜான்ராபர்ட், சுரேஷ், ஆண்ட்ரூஸ், ராஜேஷ், ரவிச்சங்கர், S.S.கணேசன், S.கணேசன், ஹரிகிருஷ்ணன், ஜெயராஜ், அதிசயராஜ், மணி, வாசுதேவன், ரஜினிவேல்முருகன், இன்பென்ட்ரூபன், கண்ணன், ரமேஷ், சித்திரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, விமலராகவன், சேர்மகனி, லிங்கராஜ், பெருமாள், செந்தில்குமார், மேலும் செயற்குழு உறுப்பினர்கள், சரவணக்குமார், உதயகுமார், தேவபிரகாஷ், பிரதீப்குமார், கந்தசாமி, ராம்குமார், மருதாச்சலம், சுரேந்தர், அகில், கணேஷ்குமார், அருண்சிங், ரவி, மோகன், ரவிக்குமார், ஜெயபிரகாஷ், ஞானேஸ்வரன், முத்துப்பாண்டியன், ஸ்டார்பி ஜெகன், உதயகுமார், குமரேசன் ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினர்.

இறுதியில் முத்துக்குமார் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில், பெற்றோர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.