த.வெ.க தலைவர் விஜய் குறித்து கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து தன்னை குறிவைத்து சிலர் அவதூறு பரப்புவதாக நடிகை ஜூலி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான நடிகை ஜூலி, சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், தன்னை திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக கிட்னி விற்பனை மோசடியில் தன்னை தொடர்புபடுத்தி ஆதாரமற்ற பொய்யான காணொளிகளை வெளியிட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக த.வெ.க நிர்வாகி உட்பட 8 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற பரப்புரையில் விஜய் பேசிய கருத்துகளை விமர்சித்து ஜூலி காணொளி வெளியிட்டிருந்தார். இதையடுத்து சமூக ஊடகங்களில் சிலர் தன்னை மிரட்டி பதிவுகள் வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்து வெளியிட்ட மற்றொரு காணொளியில், “விஜய் அண்ணா, நீங்கள் என்னை பழிவாங்க வேண்டுமெனில் நான் வீட்டிலோ அல்லது என் அலுவலகத்திலோ இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் என்னை சார்ந்தவர்களுக்கு எந்தத் தொந்தரவும் செய்ய வேண்டாம்,” என்று ஜூலி கூறியுள்ளார்.



Leave a Reply