தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்க இருந்த வேலூர் மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சார பொதுக்கூட்டம், பிப்ரவரி 2-வது வாரத்தில் நடைபெறவிருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் பிப்ரவரி இறுதி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலூர் அருகே பள்ளிகொண்டா பகுதியில், சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே 25 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, விஜய் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நடைபெறவிருந்த இரண்டாவது நிகழ்ச்சியாக வேலூர் கூட்டம் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply