,

விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தை பார்க்க டிக்கெட் வழங்கிய கோவை தேமுதிகவினர்

vijayakanth
Spread the love

கோவையில் விஜயகாந்த் நினைவஞ்சலி செலுத்தும் விதமாக கோவை ராம் நகரில் உள்ள குமரன் திரையரங்கில் பொதுமக்களுக்கு விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தை பார்க்க தேமுதிகவினர் பொது மக்களுக்கு இலவசமாக சினிமா டிக்கெட் வழங்கினர்.

இது குறித்து அவர்கள் கூறும் பொழுது, “மறைந்த  தலைவர் நடிகருமான கேப்டன் விஜயகாந்த்துக்கு நினைவாஞ்சலி செலுத்தும் விதமாக அவர் நடித்த டிஜிட்டல் படங்களை வரும் நாட்களில்  கோவை மாநகர பகுதி கிளை தேமுதிக சார்பில் இலவசமாக பொதுமக்களுக்கு பார்க்கும் வகையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.” என்றனர். முன்னதாக திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு டிக்கெட் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் கலந்து கொண்டார்.

மேலும், கோவை மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் சிங்கை சந்துரு, மாவட்டத் துணைச் செயலாளர் எஸ் எஸ் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் செல்வபுரம் செந்தில், காந்திபுரம் பகுதி செயலாளர் செந்தில்குமார், ஆர் எஸ் புரம் பகுதி குணா, பீளமேடு பகுதி பன்னீர்செல்வம் , சிங்கை மேற்கு பகுதி அழகர் செந்தில், வர்த்தக அணி துணை செயலாளர் கார்த்திசன், இளைஞர் அணி குணா, தொண்டரணி நேர்மை சந்திரன், ராஜீவ் காந்தி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் நீனா வேலுச்சாமி,67 வார்டு செயலாளர் சீனி ஆகியோர் முன்னிலையில் பலர் கலந்து கொண்டனர்.  இந்த விழாவின் ஏற்பாட்டை  மாவட்ட மாணவரணி செயலாளர் ஜீவானந்தம் செய்திருந்தார்