வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி

Spread the love

வயநாட்டில் உள்ள நிலம்பூர் வனப்பகுதியில் வாழும் மக்களை நேரில் சந்தித்த மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.
கேரள மாநிலம், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினரான பிரியங்கா காந்தி, அந்த தொகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.அதனொரு பகுதியாக, கொட்டியம்வயல் வனப் பகுதிக்குள் முன்மொழியப்பட்ட படிஞ்சரத்தாரா – பூழித்தோடு சாலை திட்டத்தை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலருடன் இணைந்து பிரியங்கா காந்தி புதன்கிழமை பார்வையிட்டார்.
தொடர்ந்து, நிலம்பூர் அருகேவுள்ள கருளை காடு வனப்பகுதிகளில்
வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.