வணிகர்களிடம் பறக்கும் படையினர் அத்துமீறல் – விக்கிரமராஜா போராட்ட அறிவிப்பு

Spread the love

வணிகர்களிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் வியாபாரம் செய்யும் பணத்தை பறிமுதல் செய்து வருவது தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம், இதை கண்டித்து வருகிற 31ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் அவர் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் திருவாருரில் வருகிற மே மாதம் 5 ம் தேதி நடைபெற உள்ள 43-வது மாநில மாநாட்டில் கோவை மாவட்டத்திலிருந்து 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்க வைப்பது மற்றும் சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கும் கார்பேர்ட் கம்பெனிகள் ஆன்லைனில் வணிகம் செய்வதை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கல் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா” வணிகர்களை பாதுகாக்க அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே மனு அளித்துள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை . நேற்று காலை ஆடு அறுத்த கூலியை பெற்று சென்ற சாமானிய வணிகரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் சூழ்ந்து மறியல் செய்து திருப்பி வாங்கியிருக்கிறார்கள் . பறக்கும் படை அதிகாரிகள் காய்கறி பழக்கடைகளை முன்பு நின்று கொண்டு வணிகர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர் .

இந்த பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் வருகிற மார்ச் 31ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.