கோவிலில் சாமி தரிசனம் முடித்து செல்லும் வழியில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்ததால் கேரளத்தைச் சேர்ந்த குடும்பத்தின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியை சேர்ந்தவர் நதுவெட்டில் பத்மநாபன் (51) . இவருக்கு, ஸ்மிதா என்ற மனைவியும், 10ஆம் வகுப்பு படிக்கும் ஸ்ரீஹரி என்ற மகனும், 7ஆம் வகுப்பு படிக்கும் பர்வானா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளாக பத்மநாபன் கோழிச்சேனாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வருகிறார். அண்மையில் கோவையிலுள்ள உள்ள கோவில் ஒன்றுக்கு சாமி தரிசனம் சென்றார். பின்னர், மார்ச் 26ஆம் தேதி கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் போது, ரூ.250 மதிப்புள்ள கேரள சம்மர் பம்பர் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். இதற்கு முன்னர், அவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்ததில்லை. முதன்முதலாக வாங்கியுள்ளார்.
தொடர்ந்து அவர் வாங்கிய SB 517026 என்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளதாக காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், பத்மநாபனின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். வெற்றி பெற்ற லாட்டரி சீட்டை பத்மநாபன் பரப்பனங்காடியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளையில் டெபாசிட் செய்துள்ளார்.


Leave a Reply