ராயல் கேர் புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பாக நடைபெற்ற சர்வவைர்ஸ்  மீட் அப்

Spread the love

கோவையில் புற்றுநோயில் இருந்து மீண்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. புற்று நோய் குறித்த பயம் விலகி நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் , ராயல் கேர் புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் சார்பாக நடைபெற்ற  இதில் புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து மீண்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
இதில் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், பல வித இன்னல்களை தாண்டி தன்னம்பிக்கை என்பதை உறுதியாக நிரூபித்த மாபெரும் சக்தி வாய்ந்தவர்கள் இங்கு அமர்ந்து இருப்பதாக தெரிவித்தார்… நாடகம் ,நடனம் போன்ற  பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மற்றும் தமிழ் புலமை சொற்பொழிவு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புற்றுநோய் விழிப் புணர்வு நிகழ்வுகளில், புலவர்  ராமலிங்கம் அய்யா தலைமையில் கல்லூரி மாணவிகள் பங்குபெற்ற சமூக ஊடக மருத்துவம் அல்லது நேரடி மருத்துவர் ஆலோசனை — எதை நம்பலாம்? என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.  புற்று நோய் விழிப்புணர்வு என்கிற தலைப்பில் ஓவிய போட்டி மற்றும் கோலப்போட்டி(ரங்கோலி), நாடகம், நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க மாதேஸ்வரன் வழங்கினார்.
முன்னதாக சர்வவைர்ஸ் மீட் அப் நிகழ்ச்சி குறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க மாதேஸ்வரன் மற்றும் புற்று நோய் சிகிச்சை மருத்துவ நிபுணர் என்.சுதாகர் ஆகியோர் பேசுகையில், புற்றுநோய் சிகிச்சையில் தற்போது குணமடைவோர் சதவீதம்  நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் அதிகரித்து இருப்பதாகவும்,எனவே நோயாளிகள் பக்க விளைவுகள் இல்லாமல் எளிதில் புற்று நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என நம்பிக்கை தெரிவித்தனர்.
புற்று நோய் என்றாலே குணப்படுத்த முடியாத நோய் என்ற தவறான புரிதல் பொதுமக்களிடையே இருப்பதாக தெரிவித்த அவர்,இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதால் புற்று நோய் குறித்த பயம் விலகி நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே நோக்கம் என தெரிவித்தனர். நிகழ்ச்சியில் புற்று நோய் சிகிச்சை மைய மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.