​ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான்

Spread the love

உலக தலைக்காயம் மற்றும் விபத்து காயம் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது

கோவை ரேஸ்கோர்சில் உள்ள சக்தி சுகர்ஸ் கார்ப்பரேட் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இந்த நடை பயணம் டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள ராயல் கேர்  சிட்டி யூனிட் மருத்துவமனையை சென்றடைந்தது .

முன்னதாக நடைபெற்ற தலைக்காயம் மற்றும் விபத்து காயம் மேலாண்மை விழிப்புணர்வு நடைப்பயணம் நிகழ்ச்சிக்கு  ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரும், நரம்பியல் மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் க. மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

கோவை ஐ.எம்.ஏ. கிளையின் தலைவர் டாக்டர் பி. கோஷல் ராம் மற்றும் கௌரவச் செயலாளர் டாக்டர் டி. பரமேஸ்வரன் ஆகியோர் இந்த நடை பயணத்தை தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து ராயல் கேர் மருத்துவமனை தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் க.மாதேஸ்வரன் கூறுகையில், அதிவேக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, விழிப்புணர்வின்மை, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாதது, தலைக்கவசம் மற்றும் இருக்கைப் பட்டைகளை அணியாதது, அதிவேகம் மற்றும் வாகனங்களை முறையாகப் பராமரிக்காதது ஆகியவை தலையில் காயம் ஏற்படுத்தும் பல விபத்துக்களுக்குக் காரணமாகின்றன. மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில் ராயல் கேர் மருத்துவமனை ஆர்வமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் எம் என் சிவகுமார், கே.டி .மணி செந்தில்குமார், கோசல் ராமன் டாக்டர் பரந்தாமன் சேதுபதி, ராயல் கேர் மருத்துவமனையின் மார்க்கெட்டிங் பிரிவு முதன்மை பொது மேலாளர் எம். வெங்கடேசன் உள்பட ராயல் கேர் மருத்துவமனையின்  மருத்துவர்கள், துணை மருத்துவ மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 400 பேர் கலந்து கொண்டனர்.