கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பீளமேடு மற்றும் பீளமேடு புதூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்திற்காக வந்த அவருக்கு அதிமுகவினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அதன் ஒரு பகுதியாக ராட்சத கிரேன் மூலம் பழங்களால் செய்யப்பட்ட பெரிய மாலையை அணிவித்து அவரை வரவேற்றனர்.
தொடர்ந்து, சிலம்பாட்டம் ஆடும் குழுவினருடன் இணைந்து சிலம்பாட்டம் ஆடி மக்களிடம் ஆதரவு கோரினார். சிலம்பாட்டம் ஆடிய குழந்தைகளை பாராட்டி அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
பின்னர் அருகிலுள்ள தேநீர் கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்திய அவர், தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து சாலை மார்க்கமாக வாகன பேரணியில் கலந்து கொண்டு, குடியிருப்பு பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
அப்போது அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் திட்டங்களை விளக்கி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியினர் மற்றும் அதிமுகவினர் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Leave a Reply