ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு புதிய நேர நிர்ணயம்!

Spread the love

ரயில் புறப்படும் 8 மணி நேரத்திற்கு முன் பயணிகள் அட்டவணை வெளியிடப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை 4 மணி நேரத்திற்கு முன்பே வெளியிடப்பட்ட பயணிகள் பட்டியல் காரணமாக பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

புதிய மாற்றத்தின்படி, பயணிகள் காத்திருப்பு பட்டியல் நிலவரத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடிவதால், மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான நேரம் கிடைக்கும். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த பரிந்துரையை ஏற்று, ரயில்வே வாரியத்திற்கு படிப்படியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை குறிப்பாக தூர இடங்களில் இருந்து பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகுந்த பயனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.