வருகின்ற 18ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை தர உள்ள நிலையில், அதனை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கான தொடக்க நிகழ்வாக, முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், அதிமுக மாணவரணி செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு கூட்டம் நடைபெறும் இடத்தில் மேடை அமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் வசதிகள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மோடி பொதுக்கூட்டம்: முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் தொடங்கிய பணிகள்



Leave a Reply