கோவை பீளமேடு அவிநாசி சாலைபகுதியில், நடைபெற்று வரும் மேம்பாலத்தின் ஏறுதளத்தின் தூண் அமைக்கும் பணி நடைபெறுவதை மாற்றி அமைக்க வலியுறுத்தி பீலமேட்டில் நடைபெற்ற கூட்டத்தில், பாரம்பரிய மிக்க இந்த சாலைக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை தொடர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன்கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுமக்கள் நலன் கருதி இப்பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் பீளமேடு துரைசாமி, விளாங்குறிச்சி சாலை மீட்பு குழு விஜயக்குமார், செந்தில்குமார், நந்த கோபால், ராமமூர்த்தி பிரகாஷ், பாரதிதாசன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மேம்பால தூணை மாற்றி அமைக்க மனு

Leave a Reply