முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாள் ரத்ததான முகாம்

blood donation
Spread the love

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு வரதராஜபுரம் சாய் மகாலில், கோவை மாநகர் மாவட்ட திமுக மற்றும் தளபதி இரத்ததான இயக்கம் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்ததானம் வழங்கும் முகாம் மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், தலைமை நிர்வாகிகள் தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி, தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ‌ தமிழ்மறை, வர்த்தகர் அணி இணைச் செயலாளர் நா. முருகவேல், தொழிலாளர் அணி துணைச் செயலாளர் தமிழ்செல்வன்,மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், எஸ்.எம்.சாமி மற்றும் இரத்த தான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.