,

மிருதங்க மேதை கணபதி ஐயர் நினைவு நவராத்திரி இசை விழா

mirudhangam
Spread the love

கோவையின் மூத்த சங்கீத வித்வானும், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முன்னாள் முதல்வருமான கே. சிவராமகிருஷ்ணன் தலைமையில் நவராத்திரியை முன்னிட்டு, மிருதங்க மா மேதை கணபதி ஐயர் நினைவு நவராத்திரி இசை விழா கோவை ஏரோட்ரோம் பூம்புகார் நகரில் அக்டோபர் 3,4,5, 6 ஆகிய 4 நாட்கள் நடைபெற்றது.
இறுதி நாள் முதல் நிகழ்ச்சியாக ஸ்ருதி பிராந்த் பாட்டு, பேரூர் ரவி வயலின் பழனிசாமி மிருதங்கம் வாசித்தனர். அடுத்த நிகழ்ச்சியாக கார்த்திக் பாட்டு, பேரூர் ரவி வயலின், சதீஷ் மிருதங்கம் வாசித்தனர். இறுதியாக பி.எஸ்.ஜி டெக் விரிவுரையாளர் ஏ.எஸ்.பிரசாந்த் பாட்டும் ஆனந்த சிவராமகிருஷ்ணன் வயலின், வாசிக்க பாலக்காடு மகேஷ் ​மிருதங்கமும் வாசிக்க இசைவிழா நிறைவுற்றது.
இந்நான்கு நாள் இசைவிழாவினை இணைந்து நடத்திய கணபதி ஐயரின் மாணாக்கர்கள் இவ்விழாவினை வருடந்தோறும் பிப்ரவரி மாதத்தில் இளைய தலைமுறை இசைக்கலைஞர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தும் வகையில் மேலும் சிறப்புற நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். மிருதங்க மாமேதை கணபதி ஐயரின் மூத்த சிஷ்யர் கோவை கே எஸ் ரகுநாத், வயலின் கலைஞர் ப்ருந்தா ரகுநாத் மற்றும் பலர் கலந்து கொண்டு கணபதி ஐயருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.