, , ,

மாநிலம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்…..

Resan
Spread the love

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம்  சார்பில் 10அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும்   வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  செப்டம்பர் 5-ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்” என தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ர மணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன், மாவட்ட தலைவர் ஆறுமுகம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்கள் பங்கேற்றனர்.