கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிந்து, இந்த நீரை அங்கு நிரப்பினால் சுற்றுச்சூழல் மாசு அடையும் என்பதால் சுத்திகரிக்கப்பட்ட நீரை அந்த ஏரியில் நிரப்பும் திட்டத்தை கைவிடவும், சின்னவேடம்பட்டியில் 2வது வார்டில் உள்ள பூங்காவை சீர்படுத்தி அதை முறையாக பராமரிக்க வேண்டியும், மேலும் கோவை விமான நிலையம் அருகே 23 வார்டு அசோக் லே அவுட் பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்கவும், எம்.ஜீ.ஆர் நகர் பகுதியில் சேதமடைந்த மேல்நிலை நீர்தொட்டியை அகற்றி புதிய நீர் தொட்டி அமைக்கவும், மாநகராட்சி ஆணையாளரிடம் கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கோரிக்கை மனு அளித்தார். அருகில் சின்னவேடம்பட்டி பகுதி செயலாளர் மாரிசாமி, தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல செயலாளர் விக்னேஷ், 23 வார்டு செயலாளர் ரகுபதி ஆகியோர் இருந்தனர்.
மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தார் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

Leave a Reply