மதுரை மாநகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள்: மேயர் வேண்டுகோள்

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி, பல்வேறு அரசு திட்டங்களின் பயனைப் பெறலாம்.

முதலமைச்சர் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரும் 15.07.2025 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் துவக்கவுள்ளார்.

இத்திட்டத்தின் அம்சமாக, தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று முகாம் நடைபெறும் நாள், இடம், முகாம்களில் வழங்கப்படும் சேவைகள், அவற்றுக்கான தகுதி மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் குறித்த தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பதுடன், விண்ணப்பங்களும், தகவல் கையேட்டுகளும் வழங்கப்படுகின்றன.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியான, ஆனால் இதுவரை விண்ணப்பிக்காத மகளிர், முகாம்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பம் வழங்க “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் மட்டுமே அமையப்பட்டுள்ளது. முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும்.

மதுரை மாநகராட்சியில் இந்தத் திட்டத்தினைக் குறித்து மக்களுக்கு விளக்குவதற்காக 1,002 தன்னார்வலர்கள் 07.07.2025 முதல் வீடு வீடாக சென்று தகவல் மற்றும் விண்ணப்பப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முகாம்கள் நடைபெறும் இடங்களில் குடிநீர், கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், மருத்துவ குழு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் நடைபெறும் முகாம்களின் விவரம் வருமாறு:

மண்டலம் 1:

  • 17.07.2025: வார்டு 3, 4 – ஆனையூர் வார்டு அலுவலகம்

  • 24.07.2025: வார்டு 8, 11 – மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகம், சர்வேயர் காலனி

  • 02.08.2025: வார்டு 36, 37 – தாகூர் பள்ளி, வண்டியூர்

  • 08.08.2025: வார்டு 5, 13 – பாண்டியன் மகால்

மண்டலம் 2:

  • 17.07.2025: வார்டு 15, 31 – மடீட்சியா மகால், டாக்டர் அம்பேத்கார் சாலை

  • 24.07.2025: வார்டு 1, 2 – புஷ்பம் கல்யாண மகால், அஞ்சல் நகர்

  • 07.08.2025: வார்டு 26, 27, 28 – சோலை மகால், செல்லூர்

  • 12.08.2025: வார்டு 65, 66 – ஆனந்தம் மகால், பாஸ்டின் நகர், அண்ணா மெயின் வீதி

மண்டலம் 3:

  • 17.07.2025: வார்டு 54, 76 – சுற்றுலா பயணிகள் தகவல் மையம், பெரியார் பேருந்து நிலையம்

  • 24.07.2025: வார்டு 52 – சுற்றுலா பயணிகள் தகவல் மையம், பெரியார் பேருந்து நிலையம்

  • 31.07.2025: வார்டு 50, 51 – ஆதினம் மகால், வடக்கு மாசி வீதி

  • 08.08.2025: வார்டு 55 – மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகம்

மண்டலம் 4:

  • 17.07.2025: வார்டு 86, 87 – ராணி பொன்னம்மாள் கல்யாண மகால், தவிட்டு சந்தை

  • 31.07.2025: வார்டு 43, 44 – மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகம்

  • 08.08.2025: வார்டு 46, 47 – திருவள்ளுவர் பள்ளி

  • 14.08.2025: வார்டு 29, 30 – இளங்கோ மாநகராட்சி மேனிலைப் பள்ளி, பனகல் சாலை, செனாய்நகர்

மண்டலம் 5:

  • 17.07.2025: வார்டு 79, 80, 81 – சேதுராஜன் பத்மா திருமண மகால், ஜெய்ஹிந்துபுரம்

  • 24.07.2025: வார்டு 71, 74 – மாநகராட்சி சமுதாய கூடம், பழங்காநத்தம்

  • 02.08.2025: வார்டு 73, 78 – சேசு மகால், சத்யசாய் நகர்

  • 14.08.2025: வார்டு 97, 98 – ஒக்கலிங்கர் காப்பு திருமண மகால், திருப்பரங்குன்றம்

மேற்கூறிய முகாம்கள் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு, மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொள்கிறார்கள்.