மசக்காளிபாளையம் நடுநிலைப்பள்ளியில் நான்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கம் – நம்ம ஸ்கூல் நம்ம ஊரு திட்டம்

Spread the love

இன்று மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் நான்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்பட்டன. இந்த வசதிகள் ₹8.20 இலட்சம் மதிப்பீட்டில் யுனிவர்சல் MEP புராஜெக்ட்ஸ் & எஞ்சினியரிங் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் டாடா வோல்டாஸ் நிறுவனங்களின் ஒத்துழைப்பில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வகுப்பறைகள் TATA CLASS EDGE நிறுவனத்தின் ஸ்மார்ட் பேனல்கள் மற்றும் மென்பொருட்களுடன் உயர் தொழில்நுட்ப வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளன.

துவக்க விழாவில் யுனிவர்சல் MEP புராஜெக்ட்ஸ் & எஞ்சினியரிங் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் பங்கேற்றோர்:

  • Jignyasa (Head CSR, Mumbai)

  • Karthick (Manager, HR)

  • Kalyan Maiti (Head, Project Management)

  • Prabavathi (Manager, IT)

TATA CLASS EDGE நிறுவனத்தின் சார்பில் பங்கேற்றோர்:

  • Albert Cornelius, Regional Key Account Manager

  • Krishna Kumar, Area Technical Manager

  • Nithin, Area Academic Manager

  • Mahesh Latesh Bhingarde, Vice President, Key Accounts

மேலும் கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திரு மோகன், பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை சுகுணா மற்றும் ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த புதிய ஸ்மார்ட் வகுப்பறைகள் மாணவர்களுக்கு உயர்தர கல்வி மற்றும் நவீன தொழில்நுட்ப அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.