திமுக அரசைக் கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே கண்டன முன்னாள் அமைச்சர் எஸ்பி. வேலுமணி மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி. வேலுமணி சிறப்புரை ஆற்றுகையில், “திமுக ஆட்சியைப் பற்றி உங்கள் அனைவருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. ஆட்சி என்றால் மக்களை பாதுகாக்க வேண்டும் முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சட்ட ஒழுங்கு எவ்வளவு சிறப்பாக இருந்தது என்று மோடி பேசி இருந்தார். ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சிறப்பாக இருந்ததோ அதுபோல எடப்பாடியார் தமிழக முதல்வராக இருந்தபோது சிறப்பான ஆட்சியை நடத்தினார். சட்ட ஒழுங்கு சிறப்பாக இருந்தது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்து விட்டது. காவல்துறை செயல்படவில்லை. லாக்கப் மரணங்களை தடுக்க தவறிவிட்டது. தினந்தோறும் கொலை, கொள்ளை என நடந்து வருகிறது.பத்திரிக்கை நண்பர்கள் யாருக்கும் பயப்படாதீர்கள். சுதந்திரமாக செயல்படுங்கள்.
திமுக இனி ஆட்சிக்கு வரவே முடியாது. கழக ஆட்சிக் காலத்தில் கோவை மாவட்டத்தில் 50 ஆண்டு காலம் காணாத வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த திட்டங்களும் கோவை மாவட்டத்திற்கு நிறைவேற்றப்படவில்லை. கோவை மாவட்டத்தை முற்றிலுமாக திமுக முற்றிலுமாக புறக்கணித்து விட்டது.
காவல்துறை அதிகாரிகளே யாருக்கும் பயப்படாதீர்கள். நியாயமாக செயல்படுங்கள். சரவணம்பட்டி ரோட்டில் ஒரு பெண்ணை எரித்துக் கொன்றிருக்கிறார்கள். இதுவரையும் எந்த பத்திரிகையிலும் வரவில்லை. காவல்துறை ஆணையர் அது குறித்து பேட்டி அளிக்கவில்லை. அந்தப் பெண்ணை கற்பழித்து கொன்றிருக்கிறார்கள்.
காவல்துறை திமுக ஆட்சிக்கு பயப்படுகிறது. குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பாக இருக்கிறது. குற்றம் நடந்ததை வெளியிடாமல் செய்துள்ளார்கள். பாலியல் வன்கொடுமை , கொலை, கொள்ளை கோவை மாவட்டமின்றி தமிழக முழுவதும் அதிகரித்துவிட்டது.
கஞ்சா போதை பொருட்கள் எங்கு பார்த்தாலும் விற்பனை செய்யப்படுகிறது. திமுக ஆட்சி தடுக்கவில்லை. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை, மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை காப்பாற்றவே முடியாது. என்ன வேண்டுமானாலும் சொல்லி ஏமாற்றுவார்கள். யாரும் ஏமாந்து விடாதீர்கள்.
திமுக எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுவது வேலையாக செய்து கொண்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நடக்கப்போகிறது. இதில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யப் போகிறாய் என்று சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு மத்திய அரசு, மத்திய அரசு அடிமை என்று கூறிக் கொண்டிருக்கிறது. இப்படியெல்லாம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக.
11 மருத்துவக் கல்லூரிகளை மோடி அவர்கள் தமிழகத்திற்கு தந்தார். கேட்ட திட்டங்களை எல்லாம் மத்தியில் ஆளும் பாஜக தந்தது. எடப்பாடியார் முதல்வராக வந்தால் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். தமிழ்நாடு முழுவதும் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். இது முக்கியமான ஆர்ப்பாட்டம். கோவை மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் எடப்பாடியார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும்.
திமுகவுக்கு வாக்களிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் மக்களுக்கு உள்ளதா. எதுவுமே இல்லை. திட்டங்களைத் தான் தரவில்லை. தமிழக மக்களை காப்பாற்ற கூட நடவடிக்கை எடுக்கவில்லை. எதற்காக திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் கேட்கிறார்கள். அதிமுக கூட்டணியை தவிர வேறு எந்த கட்சிக்கும் வாக்களிக்காதீர்கள். அது திமுகவிற்கு வாய்ப்பாகிவிடும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டுகிறேன்.
திமுக ஆட்சிக்கு வர என்ன வேண்டுமானாலும் சொல்லி ஏமாற்றுவார்கள். இனி யாரும் ஏமாறத் தயாராக இல்லை. எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வருவார். விடுபட்ட அத்தனை திட்டங்களும் நிறைவேற்றுவார். ஆகவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள். திமுகவை விரட்டியடியுங்கள்.” என்று முன்னாள் அமைச்சர் எஸ்பி. வேலுமணி சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி வி. ஜெயராமன், செ.தாமோதரன், ஏ.கே. செல்வராஜ், செ.ம.வேலுசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே. அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், வி.பி. கந்தசாமி, அதிமுககொள்கை பரப்பு துணைச் செயலாளர் தோப்பு அசோகன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் வசந்த ராஜன், பா.ஜ.க.மாவட்ட தலைவர்கள் சந்திரசேகர், மாரிமுத்து, ரமேஷ், மற்றும் அமமுக நிர்வாகிகள் சுகுமார், மா.ப.ரோகிணி, த.மா.க, பா.ம.க, மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் திமுக தோல்வியடைந்துள்ளது – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கு



Leave a Reply