இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையில் 2023 முதல் தொடர்ச்சியாக நடைபெறும் போரின் பின்னணி சமூக மற்றும் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்களை நடத்தி காசாவை அழிவுக்கு இழுத்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், இஸ்ரேல் “ஹமாஸ் அழிக்கப்படாமல் விடமாட்டோம்” என உறுதியாக இருக்கிறது. இதனால் ஐ.நா-வின் தீர்மானங்களை சட்டப்படுத்துவதற்கு எந்தவித முன்னேற்றமும் இல்லை.
சர்வதேச மையங்களிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. ஜி20 நாடுகள், பிரிக்ஸ் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஆப்பிரிக்க ஒன்றியம் உள்ளிட்ட பல அமைப்புகள் பாலஸ்தீனத்தை ஆதரித்து விமர்சனங்களை முன்வைத்தும், போருக்கு முடிவு காண முடியவில்லை. அமெரிக்கா தனது பவரால் இதனை தடுக்கி வருகிறது.
இந்த சூழலில், கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா பயணம் செய்தார். ஆனால், அவர் ஐரோப்பிய வான்வெளியை முறையாக தவிர்த்து சென்றார். ஏற்கனவே சர்வதேச நீதிமன்றம் அவரை போர்க்குற்றவாளி என அறிவித்து வாரண்ட் பிறப்பித்துள்ளது. சில ஐரோப்பிய நாடுகள், தங்களது வான்வெளி எல்லைக்குள் நெதன்யாகு வந்தால் அவரை கைது செய்வோம் என்றும் எச்சரித்துள்ளன.
இதனால், நெதன்யாகு மத்தியதரைக் கடலை கடந்து, ஜிப்ரால்டர் ஜலசந்தி மற்றும் அட்லாண்டிக் வழியாக அமெரிக்கா சென்றார். சாதாரணமாக அமெரிக்காவிற்கு செல்லும் இஸ்ரேலிய விமானங்கள் பிரான்ஸ் மற்றும் மத்திய ஐரோப்பிய வான்வெளியை பயன்படுத்துவதைப்போல், அவர் சுமார் 600 கி.மீ. கூட சுற்றி பயணம் செய்து அமெரிக்கா வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பயணம், சர்வதேச நீதிமன்ற வாரண்ட் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எச்சரிக்கை காரணமாகவும், கைது அபாயத்தைக் தவிர்க்கும் நோக்கத்துடன் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.



Leave a Reply