புதுச்சேரி அரசு சார்பில் நடத்தப்படும் புதுச்சேரி திரைப்பட விழாவில், 2024-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான ‘நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது’, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்துக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த திரைப்பட விழா, இந்த ஆண்டிலிருந்து சர்வதேச திரைப்பட விழாவாக விரிவுபடுத்தப்பட்டு, பிப்ரவரி 12 முதல் 15 வரை புதுச்சேரியில் நான்கு இடங்களில் நடைபெறுகிறது. விழாவின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி, வியாழக்கிழமை மாலை கடற்கரைச் சாலையில் நடைபெறுகிறது.
விருது பெறும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு, சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பா. ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் திரையிடப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து வழங்கப்படும் இந்த விருது, இந்தியத் திரைப்படத்துறையில் சிறந்த படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.



Leave a Reply