பி.கே.தாஸ் பல்கலைக்கழக அலுவலகம் கோவையில் திறப்பு

pk das university
Spread the love

பி. கே. தாஸ் சமூக அறிவியல், சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் – தனித்துவ வகை டீம் டு பி யூனிவர்சிட்டியின் அலுவலகம் கோவையில் உள்ள நேரு கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் சிறப்பாக திறக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் பி. அனிருத்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ திறப்பை, மொரீசியசு – இந்திய வர்த்தக ஆணையராகவும், நேரு கல்வி நிறுவனங்களின் தலைவரும் நம்பிக்கையாளருமான வழக்குரைஞர் டாக்டர் பி. கிருஷ்ணதாஸ் நிகழ்த்தினர். நேரு கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளரான டாக்டர் பி. கிருஷ்ணகுமார்,
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஹெச். என். நாகராஜா ஆகியோர் உரையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாக, நேரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம். சிவராஜா நன்றியுரையாற்றினார்.