கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக்கல்லூரியின் விருது வழங்கும் விழா பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் (ஜூலை 04) அன்று நடைபெற்றது.
இயந்திரவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறியியல் திட்டங்களுக்கான ஆட்டோ மொபைல் பொறியியல், சிவில் பொறியியல், இயந்திர பொறியியல், உலோகவியல் பொறியியல் மற்றும் உற்பத்தி பொறியியல் துறைகளின் இளங்கலை, முதுகலை படிப்புகளான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பி.எஸ்.ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளைகளின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் கே.பிரகாசன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் ஜெய்ப்பூர் சி.கே.ஏ குழுமத்தின் தேசிய என்ஜூனியரிங் தொழில் நிறுவனத்தின் தலைமை டிஜிட்டல் அதிகாரி ஆஷிஸ் ரஞ்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விருது வழங்கும் விழாவில் 468 மாணவர்கள் தங்கள் பட்டச் சான்றிதழ்களைப் பெற்றனர். மேலும், ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் முதலிடம் பிடித்தவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Leave a Reply