, , ,

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது-கோவை முதலிடம்

Spread the love

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட நிலையில் ,இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.  தேர்வு முடிவுகளை மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in  தளங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.இதில்  கோவை மாவட்டம் 96.02 %  தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்ததாக, ஈரோடு 95.56% பெற்று இரண்டாம் இடத்தையும் ,திருப்பூர் 95.23% பெற்று மூன்றாம்  இடத்தையும் பிடித்துள்ளது.