பிறந்து பத்து நாட்களே ஆன கைக்குழந்தையுடன் காவல்துறை உடல்தகுதி தேர்விற்கு இளம் பெண் வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆண், பெண் இருபாலரும் ஏராளமானோர் வந்திருந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் குழந்தை பிறந்து பத்து நாட்களே ஆன தனது கைக்குழந்தையுடன் கோவையில் நடைபெறுகின்ற இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு உடல் தகுதி தேர்வுக்கு ஆவலுடன் கலந்து கொண்டார். இது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
Leave a Reply