பிகாரில் ஆட்சியை மீண்டும் பிடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரம்: தொகுதி பங்கீட்டில் கவனம்

Spread the love

பிகாரில் மீண்டும் ஆட்சி அமைக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), 2025 பிகார் சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீட்டிலும் முழு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிய வருகிறது.

பிகார் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இதற்கிடையில், இம்முறை முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 103 இடங்களிலும், பாஜக 100 இடங்களிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பிகாரில் மீண்டும் NDA ஆட்சியை பிடிக்க வலுவான மோதல் எதிர்பார்க்கப்படுகிறது.