,

பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

pmk
Spread the love

பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில அண்ணாமலை முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றன அதில் தமிழ்நாட்டின் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

வரும் மக்களவை தேர்தலில் பாமக மத்திய சென்னை, அரக்கோணம், தர்மபுரி, ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், சேலம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம் ஆகிய 10 இடங்களில் போட்டியிடவுள்ளது.