, ,

பத்திரிக்கையில் செய்தி வந்ததன் எதிரொலியாக சேதமடைந்த புதிய தார் சாலையை சரி செய்த அதிகாரிகள்

elephant
Spread the love

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தச்சம்பத்து முதல் திருவேடகம் வரை புதிய தார்சாலை அமைத்த நிலையில் முறையாக சாலை அமைக்
காததால், ஒரே வாரத்தில் புதிய தார் சாலையானது பெயர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சேதமடைந்த புதிய தார் சாலையின் படங்கள் வீடியோக்கள் செய்தி தால்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியான நிலையில், சேதமடைந்த தார் சாலை பகுதியினை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சரி செய்தனர் . அப்போது பொதுமக்கள் கூறுகையில்: தார்சாலை அமைக்கும் போது முறையாக போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. சாலை அமைத்து ஒரே வாரத்தில் பெயர்ந்து பத்திரி
கைகளில் செய்தி வந்து நிலையில், அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மீண்டும் தார் சாலை அமைத்தது வேதனைக்
குரியதாக உள்ளது. இனிவரும் காலங்களிலாவது, இது போன்ற பணிகளை தரமான பொருட்களைக் கொண்டு செய்ய வேண்டும் இல்லையென்றால் , அரசுக்கு தேவையில்லாத கெட்ட பெயர் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என, தெரிவித்தனர்.