​நோட்டா வாக்கு பதிவு குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க கோரிக்கை

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நோட்டா வாக்கு பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் நா. லோகு தமிழக தலைமை தேர்தல் அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் தங்களது கருத்தை பதிவு செய்யும் வகையில் நோட்டா வாக்கு பதிவு முறை நடைமுறையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய வாக்காளர் சேர்க்கை நடைபெற்று இருப்பதாலும், தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்களது வாக்கை நோட்டாவிற்கு பதிவு செய்யும் வசதி குறித்து வாக்காளர்களுக்கு தெளிவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பட்டன் எவ்வாறு இடம்பெறுகிறது, அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

எனவே, நோட்டா வாக்கு பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் நா. லோகு தெரிவித்துள்ளார்.