‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.
முதலில் தொண் டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட மாதம்பட்டி சாலை, மாரியம்மன் கோயில் அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் எழுச்சியுரை ஆற்றினார். இந்த பயணத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி “எழுச்சிப் பயணத்தில் இதுவரை தமிழகத்தில் 139 சட்டமன்றத் தொகுதிகளில் பயணித்துவிட்டு, 140வது தொகுதியாக தொண்டாமுத்தூர் வந்திருக்கிறேன். இதுவரை எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு மிகப்பெரிய கூட்டம். தொண்டாமுத்தூர் என்றைக்குமே அண்ணா திமுகவின் கோட்டை.
நேரமின்மை கா ரணமாக மரியாதைக்குரிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அவர்களால் இங்கு பேசமுடியவில்லை. நாட்டை ஆளக்கூடிய பாஜகவின் தேசியப் பொறுப்பில் இருப்பவர் நம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது நமக்குப் பெருமை. வேலுமணிக்கு எப்போதுமே தொகுதியின் ஞாபகம் மட்டும்தான் இருக்கும், தொகுதி மக்கள் பற்றி பேசிவிட்டுத்தான் மற்ற விஷயங்களைப் பேசுவார்.
அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது நீங்கள், அதனால்தான் பல்வேறு திட்டங்களை இங்கு கொண்டுவர முடிந்தது. நல்ல குணம் படைத்த வேலுமணி, காரியத்தில் கண்ணாக இருப்பார்.
மாலை 5 மணிக்குப் புறப்பட்டோம், இங்கு 7.30 மணிக்குத்தான் வந்து சேர முடிந்தது. இரண்டரை மணி நேரம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தோம். 200 இடங்களில் திமுக வெல்லும் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். வலுவான கூட்டணி என்று சொல்கிறார். ஸ்டாலின் அவர்களே தொண்டாமுத்தூர் மக்களின் எழுச்சியை டிவியில் பாருங்கள்,
தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்பதற்கு இங்கிருக்கும் மக்களே சாட்சி. உங்கள் கூட்டணி பலமாக இருக்கலாம், ஆனால் அதிமுக கூட்டணி மக்கள் பலம் பொருந்தியது.
அதிமுக, பாஜக கூட்டணி அமைத்ததுமே ஸ்டாலின் புலம்ப ஆரம்பித்துவிட்டார். சட்ட மன்றத்தில் ஸ்டாலின் பேசிய நேரத்தில் வேலுமணி, வானதி சீனிவாசனும் இருந்தனர். திடீரென ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று ஸ்டாலின் கேட்டார்.
இது அதிமுக கட்சி. எங்கள் முடிவைக் கண்டு இவர் ஏன் புலம்புகிறார்? அதிமுக பாஜக கூட்டணி அமைந்தவுடன் ஸ்டாலினுக்குப் பயம் வந்துவிட்டது. தோல்வியின் பயத்தைப் பார்க்கிறோம்.
மத்தியில் சிறப்பாக ஆட்சி செய்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியில் அம்ர்ந்திருக்கிறது. அதிமுக தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்து, மக்களுக்கு நன்மை தரும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது.மத்திய அரசிடம் தேவையான நிதி பெற்று திட்டம் அனுமதி பெற்று நிறைவேற்றினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொண்டாமுத்தூர் தொகுதியில் ஒரே ஒரு திட்டமாவது நிறைவேற்றினார்களா?
இந்த பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி.
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இரண்டாம் கட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று வேலுமணி கோரிக்கை வைத்தார். விரிவான திட்ட அறிக்கை தயாரித்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த திட்டத்தை திமுக கைவிட்டுவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இரண்டாம் கட்டத் திட்டம் நிறைவேற்றப்படும். குடிநீர் அனைவருக்கும் தடையின்றி கிடைக்கும்.
விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது.அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.
வருகின்றபோது வேலுமணி ஒரு தகவல் கூறினார். அதாவது, மண் அள்ளும் விவசாயிகள் மீது வழக்கு, ஃபைன் போட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் தடையின்றி வண்டல் மண் அள்ளிக்கொள்ளலாம்.
நாங்கள் முறையாகக் கொடுத்தோம், இன்று ஒரு லோடு மண் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள்.
திமுக அரசைப் பொறுத்தவரை ஊழல் செய்வதுதான் முதல் பணி. கருணாநிதி காலத்தில் இருந்து இன்றுவரை அது ஊழலின் ஊற்றுக்கண். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு. எல்லா துறைகளிலும் ஊழல். எந்த அதிகாரியை சந்தித்தாலும் மேலிடத்துக்கு கொடு க்கணும், கொடுத்தால்தான் பரிசீலிக்கப்படும். பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றால் 10% கமிஷன் கொடுத்தால்தான் பதிவே நடக்கிறது.”மென்று பேசினார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் மக்கள் வெள்ளத்தில் இபிஎஸ்



Leave a Reply