இந்தியாவில் ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர் தினம் என அனுசரிக்கப்படுகிறது. 1991ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடுகின்றன.
இந்த ஆண்டின் தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“எளிய பின்புலங்களில் இருந்து வந்து, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தி, மக்களின் நலன் காக்கும் தலைசிறந்த மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள்!
தன்னலமற்ற சேவைக்குச் சொந்தக்காரர்களான நமது மருத்துவர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள்! அவர்களது சேவைக்கு நமது நன்றியின் அடையாளமாக, தலைசிறந்த 50 மருத்துவர்களுக்கு இன்று விருதுகள் வழங்கி மகிழ்கிறோம்.”
மருத்துவர்கள் வழங்கும் தன்னலமற்ற சேவையை மதித்து, அரசு அளிக்கும் பாராட்டு, மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு உற்சாகமாக உள்ளது.
Leave a Reply