தென் திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

Spread the love

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் ஸ்ரீனிவாச சுவாமி மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட பத்மாவதி தாயார் சன்னதிகளுக்கு அஷ்டபந்தன ஜீர்ணோதாரண மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி ஆலய வளாகத்தில் 25 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அஷ்டபந்தன பூஜை மற்றும் கோபுர கலசங்கள் ஸ்தாபிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கும்பாபிஷேகத்தை யொட்டி புண்ணியாக வாசனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனை, விசேஷ ஹோமங்கள், வசுந்தரா ஹோமம், மகா பூர்ணாஹுதி, சாற்றுமுறை, யாத்ரா தானம், கும்ப பிரதட்சிணம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து ஸ்ரீமலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் போக ஸ்ரீனிவாசர் ஆகியோரின் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் கே.ஜி மருத்துவமனை தலைவர் ஜி.பக்தவத்சலம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மகா கும்பாபி ஷேகத்துக்கான ஏற்பாடுகளை அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *