தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டுமென்று 12 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், சிலரால் முன்வைக்கப்படும் “பணி நிலைப்பு வேண்டாம்” என்ற யோசனைகள் சமூகநீதியின் பெயரில் தூய்மைப் பணியாளர்களை தொடர்ந்து சுரண்டும் சூழல் உருவாக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக கண்டித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள் கல்வித் தகுதி அடிப்படையில் அரசு துறைகளில் நிரந்தரப் பணிக்கு முன்னுரிமை பெற வேண்டும். இல்லையெனில், தொழில் முனைவோர் ஆக்குவதற்காக 20 லட்சம் வரை சலுகைக் கடன், கூடுதல் ஓய்வுப் பலன்கள் உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அவர்களின் வேலை நிலை மற்றும் உரிமைகள் பற்றி பேசாமல், “பணி நிலைப்பு வேண்டாம்” என கூறுவது மிகுந்த அநியாயம் என்றும், இது அரசும் தனியார் நிறுவனங்களும் இணைந்து தூய்மைப் பணியாளர்களை சுரண்டும் புதிய வழியாக மாறக்கூடும் என்றும் அன்புமணி எச்சரித்தார்.



Leave a Reply