அமெரிக்காவில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களில் சுமார் 70 சதவிகிதம் ஹியூமன் பாபிலோமா வைரஸ் (HPV) காரணமாக உருவாகின்றன என்பது சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த நோய் அதிகரித்து வரும் நிலையில், கருப்பை வாய்ப் புற்றுநோயைப் போல ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை முறை இதுவரை பரவலாக பயன்பாட்டில் இல்லை. இதனால் நோய் தீவிரமடைந்த பின்னரே பலருக்கும் கண்டறியப்படுகிறது.
இந்நிலையில், ‘நாவல் லிக்விட் பயாப்சி டூல்’ மற்றும் ‘HPV-DeepSeek’ எனப்படும் புதிய பரிசோதனை முறைகள் முன்கூட்டியே நோயை கண்டறிய உதவக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் கட்டிகள் இரத்தத்தில் வெளியிடும் HPV DNA துகள்களை முழுமையான மரபணு (ஜெனோமிக்) பரிசோதனை மூலம் கண்டறியும் தொழில்நுட்பமே இதன் அடிப்படை. தற்போது பயன்பாட்டில் உள்ள பரிசோதனைகளைக் காட்டிலும் இது அதிக துல்லியத்துடன் செயல்படுகிறது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த புதிய முறையை பயன்படுத்தி 56 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 28 பேருக்கு புற்றுநோய் உருவாகும் சாத்தியம் முன்கூட்டியே கண்டறியப்பட்டது. அதில் 22 பேருக்கு புற்றுநோய் தொடர்பான DNA துகள்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதுபோன்ற மேம்பட்ட பரிசோதனைகள் பரவலாக பயன்பாட்டிற்கு வந்தால், தலை மற்றும் கழுத்து புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்து உயிரிழப்புகளை குறைக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



Leave a Reply