, ,

தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து டிரைவர்

omni bus driver
Spread the love

தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து டிரைவர் என சில ட்ரென்டிங் விடீயோக்களை பார்த் திருக்கலாம். கொங்கு பகுதியை சேர்ந்த கனிமொழி அவர்கள் தான் தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து பைலட்.
பொள்ளாச்சி டூ சென்னை வழித்தடத்தில் இயங்கும் “அழகன் பஸ்” பேருந்து நிறுவனத்தை கனிமொழி மற்றும் அவரது கணவரும் இணைந்து நடத்துகின்றனர். ஏற்கனவே ட்ராவல்ஸ் தொழில் செய்து வரும் கனிமொழியின் கணவருக்கு சொந்தமாக ஆம்னி பஸ் வாங்கி ஓட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. சமீபத்தில் அதற்கான வாய்ப்பு அமைந்தது.
பொள்ளாச்சி டூ சென்னை வழித்தடத்தில் புதிய ஆம்னி பேருந்தை இயக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
எம்.ஏ.பி.எல். முடித்து ஆசிரியர் பணியில் இருந்த கனிமொழி தனது கணவரின் இலட்சியத்தை நிறைவேற்றும் வகையில் அவரும் ட்ராவல்ஸ் தொழிலில் தன்னை இணைத்துக் கொண்டார். முறையாக பயிற்சி பெற்று ஹெவி டிரைவிங் லைசென்ஸ் வாங்கியவர், தங்களது சொந்த வண்டியில் முதல் ஆம்னி பேருந்து டிரைவராக களம் இறங்கியிருக்கிறார்.
தனக்கென்று புதிய பாதை அமைத்துக் கொண்ட கனிமொழி மற்றும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவரது கணவர் கதிர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.