தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை அறிவிப்பு – நடத்தை விதிகள் அமல்

vote image
Spread the love

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார். அதன்படி மார்ச் 30 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6 ஆகும். வேட்பு மனுக்கள் ஏப்ரல் 7 அன்று பரிசீலிக்கப்படுகின்றன. வேட்பு மனுவை திரும்பப் பெற ஏப்ரல் 9 கடைசி நாளாகும்.

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அரசு புதிய திட்டங்கள் அல்லது அறிவிப்புகளை வெளியிட முடியாது. ஏற்கனவே தொடங்கிய பணிகள் மட்டும் தொடர்ந்து நடைபெறலாம். தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் முன் அனுமதி பெறுவது அவசியம். அனுமதி இல்லாமல் கொடிகள், பேனர்கள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசு வழங்குவதும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.