தமிழகத்தில் 12ம் வகுப்பு (பிளஸ்-2) பொதுத் தேர்வின் முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இந்தாண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் தொடர்ந்து முன்னணியில் உள்ளனர். மாணவிகள் 96.70 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதுடன், மாணவர்கள் 93.16 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது வழக்கம்போல மாணவிகள் தேர்ச்சி விகிதத்தில் மேலோங்கி இருப்பதை காட்டுகிறது.
மாவட்ட வாரியான தேர்ச்சி விவரங்களில் அரியலூர் மாவட்டம் 98.82% தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. அதன் பின்னர் ஈரோடு (97.98%), திருப்பூர் (97.53%), கோயம்புத்தூர் (97.48%), கன்னியாகுமரி (97.1%) ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் குறித்த விவரங்களும் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் https://results.digilocker.gov.in இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம்.
Leave a Reply