, , ,

தமிழகத்திற்கு 7,200 புதிய பேருந்துகள்.. 1500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர் தகவல்..

BUS
Spread the love

தமிழ்நாட்டில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.  பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் உயிரை பணயம் வைத்துக்கொண்டுதான் பயணம் எ செய்யும் நிலை உள்ளது. பெண்களுக்கான  இலவச பேருந்து திட்டத்தால் மேலும் முடங்கியுள்ள போக்குவரத்துறை, பேருந்துகளை பராமரிக்காமல் இயக்கி வருகிறது. இதனால் ஏராளமான பேருந்துகள் ஓட்டை உடைசலமாக உள்ளது. பல பேருந்துகள் மழை பெய்யும் போது ஒழுகுவதுடன், இருக்கைகளும் உடைந்து காணப்படுகிறது.

நேற்று பழனியில் அரசு பேருந்தின் கூரை ஒன்று ஆடிக்காற்றி பறந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும் என்றவர், முதல்கட்டமாக மாநிலம் முழுவதும்   இயங்கும் 1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  மேலும்,  7,200 புதிய பேருந்துகள் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.