தனியாருக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படுகிறது – கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குற்றச்சாட்டு…..

Spread the love

கோவை மாவட்ட ஆட்சியர் முன்பு 100க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகவிலைப்படி கூட இல்லாத 12 மணி நேரம் வேலை பார்க்கும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே வழங்கிவிட்ட 2025-ம் ஆண்டிற்கான 16% ஊதிய உயர்வில் 10% வழங்கிவிட்டு மீதமுள்ள 6% ஊதியத்தை கபளீகரம் செய்யாதே என்றும் அரசு வழங்கிய 16% ஊதியத்தை நேர்மையாக வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன்:-

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போதுமான ஊதிய உயர்வு வழங்கவில்லை இது குறித்து தமிழக அரசிடம் கேட்டால் அது தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது அதைப்பற்றி பேசக்கூடாது என்று கூறுகிறார்கள் ஆனால் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கிவிட்டு தங்களை அழைக்கழிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

அதேபோல 108 ஆம்புலன்ஸ்கள் போதிய வசதி இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் இது குறித்து சுகாதாரத் துறை மற்றும் அதிகாரியிடம் தெரிவித்தால் தற்பொழுது இதற்கு நிதி ஒதுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பொதுமக்கள் நலன்கள் கருதி பழைய ஆம்புலன்ஸ்களும்,பழுதான ஆம்புலன்ஸ்களும் ஓட்டி வருவதாக வேதனை தெரிவித்தனர்.இது குறித்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளும் தெரிவித்தால் அலட்சியமாக செயல்படுவதாக கூறுகின்றனர்.