,

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

t20 world cup
Spread the love

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஹார்திக் பாண்டியா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் சிராஜ். ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளனர்.