சென்னை அப்பல்லோவில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அனுமதி

Spread the love

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின் படி, ராமதாஸ் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. இருதயவியல் நிபுணர்கள் தொடர்ந்து அவரை கவனித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த சில நாட்களில் ராமதாஸ் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.