சென்னையில் தங்கம் விலை ரூ.400 குறைவு: ஒரு கிராம் ரூ.11,450க்கு விற்பனை!

Spread the love

சர்வதேச பொருளாதார சூழலின் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்க விலை தொடர்ந்து ஏற்றத் தாழ்வு காண்கிறது. அண்மைய நாட்களில் வரலாறு காணாத உயர்வை தொட்டிருந்த தங்க விலை, இன்று சென்னையில் சற்று குறைந்துள்ளது.

சுமார் ஒரு வாரத்திற்கு முன், தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.12,200 என்ற புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து பல நாட்களாக விலை ஏற்றத் தாழ்வை எதிர்கொண்ட நிலையில், நேற்று முன்தினம் தங்கம் கிராமுக்கு ரூ.11,500க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்க விலையில் குறைவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து ரூ.11,450 எனவும் ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.91,600 எனவும் விற்பனையாகுகிறது.

இதேபோல், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170க்கும் ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்பனை நடைபெறுகிறது.

நுகர்வோர் மற்றும் நகை வியாபாரிகள் தங்க விலை மாற்றங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்ற சூழலில், அடுத்தடுத்த நாட்களில் விலை எவ்வாறு மாறும் என அனைவரும் காத்திருக்கின்றனர்.