சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ரூ.500 கோடி மதிப்பில் சூலூரில் ஸ்ரீவரு என்ற மின்சார பைக் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டடுள்ளது.
இதனை சிங்கப்பூர் தொழிலதிபர் ஆன்றுலியோ மற்றும் நிறுவனத்தின் இயக்குனர் செல்வராஜ் கிருஷ்ணன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். இந்த நிறுவனம் உயர் செயல் திறன் மற்றும் சுற்றுச்சூழலை பாதிகாத வண்ணம் மின்சார பைக்குகளை உருவாக்கும் என நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தொழிலதிபர் ஆண்ட்ருலியோ கூறுகையில், “தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று உலக தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்திற்கு தொழில் துவங்க விரும்புகின்றனர். அந்த வகையில் ஸ்ரீவரு மோட்டார்ஸ் நிறுவனமும் தமிழகத்தில் தொழில் துவங்கியதில் மகிழ்ச்சி” என்றார்.
Leave a Reply