உலகம் முழுவதும் உள்ள சிவ பக்தர்கள் இன்று சிவனை நாடி சிவராத்திரியில் வழிபடுகின்றனர். இந்த நிலையில், சிவ பக்தர்களின் விருப்ப தளங்களில் முதன்மையான பூண்டி வெள்ளியங்கிரி மலையில் எழுந்தருளிய வெள்ளியங்கிரி சுயம்பு லிங்கத்துக்கு பூஜை செய்து, வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். வழக்கமான நாட்களை விட இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை ஆன்மீக விழா கோலம் பூண்டது. காலையில் சூரியன் உதித்த உடன் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு நடந்த பூசையை, பக்தி பரவசத்துடன் சிவ பக்தர்கள் தரிசித்தனர். ஓம் நமச்சிவாய என்றும், அரோகரா அரோகரா என்றும் சிவநாமத்தை முழங்கி பக்தர்கள் பக்தி பரவசப்பட்டனர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சிவ கணேஷ், சிவராத்திரியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிங்கிரி மலை ஏறி வெள்ளியங்கிரி ஆண்டவரே தரிசிப்பதாக தெரிவித்தார். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை உணர்வுபூர்வமாக நினைத்து உருகி வேண்டும் பொழுது, வெள்ளிங்கிரி ஆண்டவர், பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி அருள் ஆசி தருவார் என தெரிவித்தார். வெள்ளியங்கிரி மண்ணில் கால் பதிக்கும் பக்தர்களுக்கு, அனைத்து சகல சௌக்கியங்களும் வெள்ளியங்கிரி ஆண்டவர் அருளால் கிடைக்கும் என தெரிவித்தார். இந்த நிலையில், பக்தர்கள் வழக்கத்தை விட கூடுதலாக சிவராத்திரி அன்று வெள்ளியங்கிரிக்கு வருகை புரிவதனால், வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்களுக்கு ஏழு மலைகளிலும், போதுமான உணவு குடிநீர் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தந்திருப்பதாக தெரிவித்தார். பக்தர்கள் நெகிழி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்த சிவ கணேஷ், வெள்ளியங்கிரி மலையை காதல் தன்மை மாறாமல் பக்தர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றார்.
சிவராத்திரி பூசைக்காக வெள்ளியங்கிரியில் குவிந்த பக்தர்கள் – வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு நடக்கும் சிவராத்திரி பூசைகளை தரிசித்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு



Leave a Reply