சாத்தான்குளம் ; 9 போலீசாருக்கும் மரணதண்டனை விதித்து ஏன்? – நீதிபதி சொன்ன கருத்து

Spread the love

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்தது. 9 பேருக்கும் சேர்ந்து 1.04 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராத பணத்தை பெனிக்ஸின் தாயாருக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை கொடுத்தால் காவல் துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது என்று நீதிபதி முத்துக்குமரன் கருத்தும் தெரிவித்தள்ளார். மேலும், ”அரிதினும் அரிதாக இந்த வழக்கு பார்க்கப்படுகிறது. இருவரையும் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, தந்தை முன் மகனையும் மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். வழக்கு விவரங்களை வாசிக்கும் போதே மனம் பதை பதைக்கிறது . ஒரே நேரத்தில், தந்தை மகன் என ஒரு குடும்பத்தின் ஆணி வேர் பறிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்கள் நிகழவே கூடாது” என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

மரண தண்டனை பெற்ற காவலர்கள் விவரத்தை பார்ப்போம்.

A-1 குற்றவாளி
S.ஸ்ரீதர், முன்னாள் காவல் ஆய்வாளர்

A-2 குற்றவாளி
K.பாலகிருஷ்ணன், முன்னாள் உதவி ஆய்வாளர்

A-3 குற்றவாளி
P.ரகுகணேஷ், முன்னாள் சார்பு ஆய்வாளர்

A-4 குற்றவாளி
S.முருகன், முன்னாள் தலைமை காவலர்

A-5 குற்றவாளி
A.சாமதுரை, முன்னாள் காவலர்

A-6 குற்றவாளி
M.முத்துராஜா, முன்னாள் காவலர்

A-7 குற்றவாளி
S.செல்லதுரை, முன்னாள் காவலர்

A-8 குற்றவாளி
X.தாமஸ் பிரான்ஸிஸ், முன்னாள் காவலர்

A-9 குற்றவாளி
S.வெயில்முத்து, முன்னாள் காவலர்

A-10 குற்றவாளி
A.பவுல்துரை, முன்னாள் காவலர்
(கொரைனா பாதிக்கப்பட்டு 2020 ஆகஸ்ட் 10 ஆம் தேதி உயிரிழப்பு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *