தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் காலத்தில் ஆவணமின்றி ரூ.50,000 வரை பணத்தை கொண்டு செல்ல அனுமதி உள்ளது. அதற்கு மேல் பணம் எடுத்துச் செல்லும் போது அதற்கான உரிய ஆவணங்களை பறக்கும்படை அதிகாரிகளிடம் காட்ட வேண்டும். இல்லையெனில் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் 90 பறக்கும்படை குழுக்கள், 90 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 10 காணொளி கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த பறக்கும்படை குழுக்கள் கோவையில் தீவிர சோதனைகளை தொடங்கி உள்ளன. கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பறக்கும்படை குழுக்கள் எங்கு வேண்டுமானாலும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply