கோவை விமான நிலையத்தில் அனாதையாக கிடந்த பையால் பரபரப்பு

Spread the love

இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவை விமான நிலையத்தில் தீவிர சோதனைக்கு பின்னர் பயணிகள் அனுமதி அளிக்கப்படுகிறது.  இந்நிலையில் கோவை விமான நிலையத்தில்  அனாதையாக ஒரு பை கிடந்துள்ளது. இதனை பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஏதேனும் வெடிகுண்டு இருக்குமோ என மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் கொண்டு உடனடியாக அந்த பையை சோதனை செய்தனர். அதன் பின்னர் அந்தப் பையை உள்ளே கொண்டு சென்று ஸ்கேன் செய்தனர். அதில் ஒன்றும் இல்லாததை தெரிந்து கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பின்னர் யாரோ ஒரு  பயணி அந்த பையை விட்டு, விட்டு சென்று இருக்கலாம், யாரேனும் பையை காணவில்லை என்று புகார் கூறினால், அதனை அவர்கள் திருப்பிக் கொடுக்க எடுத்துச் சென்றனர். கோவை விமான நிலையத்தில் தனியாக கிடந்த பையால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.